img-herobanner-lg

மூத்தோருக்கான மின்னிலக்கமயமாதல் திட்டம்

உங்கள் மின்னிலக்கப் பயணத்தைத் தொடங்க எந்த வயதும் சரியான வயதே!

இப்போதே புதிய திறன்களைக் கற்றுக் கொள்ளுங்கள்
small-banner-image

வண்ணமயமான மின்னிலக்க வாழ்க்கையுடன் இணைந்திடுங்கள்

மின்னிலக்கமயத்தின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல நாங்கள் உங்களுக்கு உதவுவோம்! 

இது பெரும் பாய்ச்சலாகத் தோன்றலாம். ஆனால், நீங்கள் ஓர் அடி முன்வைத்தாலே போதுமானது. 

நீங்கள் தொடங்க நாங்கள் உதவி செய்து, ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுக்குத் துணை புரிவோம். 

தயாரா? மின்னிலக்கமயமாக வாருங்கள்! 

மின்னிலக்கக் கற்றலின் 3 பிரிவுகள்

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மூத்தோருக்கான மின்னிலக்கமயமாதல் திட்டம், உங்களது மின்னிலக்கக் கற்றல் பயணத்திற்குத் துணை புரியும். 

உங்களது தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப, எங்கள் கற்றல் திட்டம் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் 3 மின்னிலக்கத் திறன் பிரிவுகளில் வழிகாட்டப்படுவீர்கள். 

  • தொடர்புத் திறன்கள்

    பிரிவு 1: தொடர்புத் திறன்கள்

    அடிப்படைத் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தவும், கோப்புத் தகவல் அனுப்பவும், காணொளி அழைப்புகள் செய்யவும் கற்றுக் கொள்ளுங்கள்
  • மின்னிலக்க அரசாங்கச் சேவைகள்

    பிரிவு 2: மின்னிலக்க அரசாங்கம் சேவைகள் மற்றும் வாழ்க்கைமுறை செயலிகள்

    அரசாங்கத்தின் மின்னிலக்கச் சேவைகளைப் பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, Singpass செயலியை பயன்படுத்தி SafeEntry நுழைவுப்பதிவு செய்தல்
  • மின்-கட்டணமுறைகளும் மின்னிலக்க வங்கிச்சேவையும்

    பிரிவு 3: மின்-கட்டணமுறைகளும் மின்னிலக்க வங்கிச்சேவையும்

    சந்தைகளிலும் உணவங்காடி நிலையங்களிலும் SGQR குறியீடுகளைப் பயன்படுத்துதல் போன்ற மின்-கட்டணமுறைகள், இணைய வங்கிச்சேவை செயலிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த கற்றுக்கொண்டு, இணையப் பாதுகாப்பு குறிப்புகளும் பெறுங்கள்.

கேளிக்கையான, எளிய வழிகளில் புதிய மின்னிலக்கத் திறன்களைக் கற்றுக் கொள்ளுங்கள்!

digital-journey-support

உங்களது மின்னிலக்கப் பயணத்திற்கு ஆதரவளிப்போம்

மின்னிலக்கமயமாதல் அனைவருக்குமானது. நீங்கள் பங்குபெறும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பதிவு செய்து, மூத்தோருக்கான பிரத்யேக திறன்பேசித் திட்டங்களை அனுபவிக்கலாம். 

திறன்பேசி அல்லது கைப்பேசித் திட்டம் வாங்க வசதியில்லாத உங்களில் சிலருக்கு, நிதி உதவி கிடைக்கும். 

மேலும் அறிக

உங்களைச் சுற்றிலுமுள்ள கதைகள்