
ஈடுபாடு கொள்ளுங்கள்
மூத்தோர்கள் மின்னிலக்கமயமாகி தங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்க உதவுவதில் ஆர்வம் இருக்கிறதா? நீங்கள் ஈடுபாடு கொள்ளக்கூடிய சில வழிகள் இவை!
மூத்த தகவல்தொடர்பு நல்வாழ்வு தூதர்கள் (SIWA)
நீங்கள் மின்னிலக்கத் திறன்பெற்ற மூத்தோரா, அல்லது சக மூத்தோர்கள் மின்னிலக்கமயமாக உதவுவதில் ஆர்வமுள்ள 50 வயதுக்கு மேலான யாரையேனும் உங்களுக்குத் தெரியுமா? உங்கள் பதில் ஆம் என்றால், வளர்ந்துவரும் மூத்த தகவல்தொடர்பு நல்வாழ்வு தூதர்கள் குடும்பத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
SG:D நண்பர்கள் திட்டம்
SG:D நண்பராக ஒரு மாற்றத்தை உண்டாக்குங்கள்! சிங்கப்பூரர்களை மின்னிலக்கத்திற்குத் தயார்ப்படுத்த உதவும் கூட்டு முயற்சியில் சேர நிறுவனத் தொண்டூழியர்களை நாங்கள் வரவேற்கிறோம். மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
தனிநபராக அல்லது நிறுவனமாக நன்கொடை அளிக்கலாம்
நிதி உதவியுள்ள மின்னிலக்கக் கருவிகளுக்கு இணைக்கட்டணம் செலுத்த இயலாத அல்லது எங்களது IMDA மின்னிலக்க அணுகல் திட்டங்களின்கீழ் ஆதரிக்கப்படாத அம்சங்களில் உதவி தேவைப்படும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் உங்கள் நன்கொடை உதவியாக இருக்கும்.
மேலும் அறிய